சபரிமலை ஐயப்பன் கோவில், வரும் 9-ம் தேதி முதல் நடை திற​ப்பு - பக்‍தர்களின் பாதுகாப்பு நடவடிக்‍கைகள் குறித்து தேவசம் போர்டு ஆலோசனை

Jun 6 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதை அடுத்து, திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நட‌த்தினர்.

நாடு முழுவதும் வரும் 8ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், வணிக வளாங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று ‍தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை​பெற்றது. அதில், கோவில்களில் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், சபரிமலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒரே நேரத்தில் 50 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதம் வழங்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00