புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - மணக்குள விநாயகர், திருநள்ளாறு சனி பகவான் ஆலயங்கள் நீண்ட இடைவெளிக்‍குப் பிறகு திறக்‍கப்பட்டதால் பக்‍தர்கள் மகிழ்ச்சி

Jun 8 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் இன்று ஆலயங்கள் திறக்‍கப்பட்டன. மணக்குள விநாயகர், திருநள்ளாறு சனி பகவான் ஆலயங்களில் பக்‍தர்கள் வழிபட்டனர்.

கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும், தமிழகத்தில் கோயில்களை திறக்‍க அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், புதுச்சேரியில் கோயில்கள் திறக்கப்பட்டன. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் முகக்‍ கவசம் அணிந்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்‍கும் சானிடைசர் வழங்கப்பட்டு கைகள் சுத்தம் செய்தபின் அனுமதிக்கப்படுகின்றனர்.

காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வரன் பகவான் ஆலயத்தில் இன்று காலை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் முக கவசம் அணிந்துயும் சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்தனர். இஸ்லாமியர்கள் தொழுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரிய பள்ளியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடும் போது கைகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, கைகளை சுத்தமாக கழுவிக் கொண்டு, முகக்‍ கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு தொழுகையில் ஈடுபட்டனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சமூக இடைவெளி விட்டு, முக கவசம் அணிந்த படி தொழுகையில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00