வேளாங்கண்ணியில் வாய்க்கால் தூர்வாராமல் அலட்சியம் செய்த அதிகாரிகள் - சொந்த முயற்சியில் தூர்வாரி தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

Jun 25 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே, அதிகாரிகள் கைவிரித்த நிலையில், விவசாயிகள் தங்கள் சொந்த முயற்சியில் தூர்வாரிய வாய்க்காலில் தண்ணீர் வந்ததால், அதனை மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக எடுத்துச்சென்று, கோயிலில் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கிராமத்திற்கு, திருநெல்லிக்காவல் பிரிவு 2 வடிகால் வாய்க்காலானது பாசன வசதி அளித்து வந்தது. நீண்ட நாட்களாக இந்த வாய்க்கால் தூர்வாராமல் இருந்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறையினரிடம் பலமுறை இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், காவிரி நீரானது இப்பகுதியினருக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது வரை ஒரு சொட்டு காவிரி தண்ணீர் கூட கிடைக்காததால், சுமார் 500 ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இதனையடுத்து, பிரதாபராமபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து, 7 கிலோ மீட்டர் கொண்ட வடிகால் வாய்க்கால் மற்றும் பழைய சந்திரமதி வாய்க்காலை தங்களது சொந்த முயற்சியில் தூர்வாரினர். இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட காவிரி நீர், ஏற்வகாடு கதவணையிலிருந்து பிரதாபராமபுரம் பகுதியில் தூர்வாரப் பட்ட சித்த ஏரிக்கு வந்தடைந்தது. காவேரி நீரை, கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, அக்கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00