திருப்பதியில் கொரோனா அதிகரிப்பால் ஆகஸ்டு 5ம் தேதி வரை முழு ஊரடங்கு - ஏழுமலையான் கோயில் ஆன்லைன் மற்றும் இலவச தரிசன டிக்கெட் அதிரடி ரத்து

Jul 21 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மற்றும் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களுக்‍கும்மேல் மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த மாதம் 8ம் தேதி திறக்‍கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்‍தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்‍கப்பட்டது. இந்நிலையில், திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர், வாத்தியக்‍காரர்கள், பாதுகாவலர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவிலின் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காரும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளார். மேலும், கோவிலின் அர்ச்சகர் ஒருவர் கொரோனாவால் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, திருப்பதியில் அதிரடியாக அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு, வரும் 5-ம் தேதிவரை முழு ஊரடங்கை பிறப்பித்து, சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மற்றும் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏழுமலையான் கோவில் தரிசனத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வலியுறுத்தி, ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டிக்‍கு, திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு கடிதம் எழுதியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00