மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா : பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம்

Sep 11 2020 9:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

குலோத்துங்க சோழனின் விண்ணகரம் என போற்றப்படுவதும், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதுமான மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி நாளான நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டது. ஆதிசேஷன் வாகனத்தில் தவழும் குழந்தை கண்ணனான சந்தானகோபாலன் எழுந்தருளி அருள்பாலித்தார். பெருமாள் சன்னதியின் முன்பு அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் குழந்தை ஸ்ரீகிருஷ்ணனை வைத்து தீட்சிதர்கள் தாலாட்டு பாட்டு பாடினார்கள். இதில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நர்த்தன கிருஷ்ணன் உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நர்த்தன கிருஷ்ணர் பேழையில் வைத்து தொட்டிலில் எழுந்தருளினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00