புரட்டாசி முதல் சனியையொட்டி பெருமாள் ஆலயங்களில் களைகட்டிய வழிபாடு - அதிகாலையில் இருந்தே பக்‍தர்கள் குவிந்தனர்

Sep 19 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்‍கிழமையான இன்று, வைணவ ஆலயங்களில் பக்‍தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்‍கோயிலில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்‍கோயிலில், புரட்டாசி மாத சனிக்‍கிழமைகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்‍கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்‍கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்‍கப்பட்டுள்ளது. அதன்படி, பக்‍தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்‍கப்பட்டனர். அதேசமயம் விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைபிடிக்‍கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் இடைவெளியுடன் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் வழிபாடு செய்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான பெருமாள் கோயிலில், புரட்டாசி முதல் சனிக்‍கிழமையை முன்னிட்டு திரளான பக்‍தர்கள் வருகை தந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றி பக்‍தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை கள்ளழகர் திருக்கோயிலுக்கு உட்பட்ட தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களுக்‍கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திய பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வரும் 27ம் தேதி திருத்தேர் உலாவும், வரும் 29-ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

கரூரில், தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றிமலை வெங்கட ரமணசுவாமி திருக்கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று, பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புகழ்பெற்ற நித்யகல்யாண பெருமாள் ஆலயத்தில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, உற்சவர் ஸ்ரீநித்ய கல்யாணப்பெருமாள், முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முகக்‍கவசம் அணிந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00