அரியலூரில் புரட்டாசி மாத வழிபாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடை : காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் ஏமாற்றம்

Sep 20 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூரில் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாட்டுக்‍கு மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்ததால், கால்நடைகள் மற்றும் தானியங்களுடன் காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் ஏமற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஏழைகளின் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வைனவ கோவிலாகும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தமிழகத்தின் பலப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், தானியங்கள் மற்றும் ஆடு, மாடுகளை காணிக்கையாக செலுத்தி பெருமாளை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் திடீரென அறிவித்தார். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து மாடுகள் மற்றும் காணிக்கையுடன் தரிசனம் செய்ய வந்த பக்‍தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாவட்ட நிர்வாகம் ஓரிரு நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தால் இந்த சிரமம் ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00