திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நாளை சாமி சிலைகள் புறப்பாடு - சுசீந்திரம் கோவிலில் இருந்து அம்மன் விக்ரகம், போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் கோலாகலம்

Oct 13 2020 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பாரம்பரிய முறைப்படி பங்கேற்பதற்காக, நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட உள்ளது. இதற்காக இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து அம்மன் விக்ரகம், போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி, அம்மன் ஆகிய சாமி சிலைகள், மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம். பின்னர் அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில், சுவாமி சிலைகள் பூஜை செய்யப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக, குறைந்த பக்தர்களுடன் ஊர்வலத்தை நடத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகம் நேற்று அனுமதி வழங்கியது. அதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நங்கை அம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி, போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றது. அதன்பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு, முன்னுதித்த நங்கை அம்மனுக்கு, கோவில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ரதவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தது. ஊர்வலத்தின் முன்பு போலீசார் வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர்.

இந்த ஊர்வலம் கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக பத்மநாபபுரம் அரண்மனையை இன்று அடைகிறது. பின்னர், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும், நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00