திருவனந்தபுரம் நவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம் - பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சாமி விக்‍ரகங்கள் புறப்பாடு

Oct 14 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்‍காக, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சாமி விக்‍ரகங்கள், மன்னர்கால பாரம்பரிய முறைப்படி கேரள-தமிழக காவல்துறை அணிவகுப்புடன் புறப்பட்டுச் சென்றது.

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சுவாமி விக்‍ரகங்கள், அந்தந்த கோயில்களில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனைக்‍கு வந்தடைந்தது.

பத்பநாபபுரம் அரண்மனையில் உள்ள மன்னரின் உடை வாளை கேரள அறநிலைதுறை அமைச்சர் கடகம்பள்ளி ​திரு.சுரேந்திரன் எடுத்து, தமிழக அறநிலை துறை அதிகாரிகளிடம் கொடுத்தார். சிறப்புப் பூஜைகளுக்கு பின்னர் தேவாரக்கெட்டு சன்னிதானத்தில் இருந்து சரஸ்வதி அம்மன் விக்‍ரகம், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பல்லக்கு வாகனங்களில் எழுந்தருளின. தமிழக-கேரள காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் பத்பநாபபுரம் அரண்மனையை விட்டு திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டது.

இன்று மாலை குழித்துறை மஹாதேவர் கோயிலில் வைக்‍கப்படும் சாமி சிலைகள், தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் நாளை கேரளா அரசிடம் ஒப்படைக்‍கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00