சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறப்பு - தினமும் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதி

Oct 15 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. தினமும் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறாது எனவும், மறுநாள் 17 -ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த பூஜை வரும் 21 -ந் தேதி வரை நடைபெறும். ஆன் லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினமும் 250 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படுவார்கள். தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா சான்றிதழை கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பம்பையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் குளிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 21-ந் தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின் இரவு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00