நெல்லையில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழாவுக்‍காக சிறப்பு ஏற்பாடுகள்

Oct 17 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழாவுக்‍காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாவையொட்டி, நெல்லையப்பர் கோயிலில் இன்றுமுதல் வரும் 25ம் தேதி வரை, சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய உற்சவ மூர்த்திகள், திருக்கோயிலின் சோமவார மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாள்தோறும் காலை 11 மணியளவில் உற்சவமூர்த்திகளுக்‍கு அபிஷேகம் மற்றும் இரவு 7 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. இதர நேரங்களில், சோமவார மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்திகளைத் தரிசிக்கவும், அங்கே வைக்கப்பட்டிருக்கும் நவராத்திரி கொலுவைப் பார்வையிடவும் பக்‍தர்கள் அனுமதிக்‍கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகளை, Nellaiappar kovil official என்ற செயலியை பதிவிறக்கம் செய்து காணலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

காந்திமதி அம்பாளுக்கு லட்சார்ச்சனை இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை தினமும் மாலை 6 மணியளவில் அம்மன் சந்நிதியில் நடைபெறும் என்றும், கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00