குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா தொடக்‍கம் - பக்‍தர்கள் இன்றி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி

Oct 17 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்‍கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். 9 நாட்களும் விரதம் இருக்‍கும் பக்‍தர்கள், அம்மனை வேண்டி பல்வேறு வேடமணிந்து கலந்துகொள்வது விழாவின் சிறப்பு. இந்நிலையில், தசரா விழாவையொட்டி இன்று காலை 5 மணிக்‍கு கோயில் நடை திறக்‍கப்பட்டு, அம்மனுக்‍கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, கோயில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹர வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அச்சத்ததால் கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்‍தர்களுக்‍கு இந்த ஆண்டு அனுமதியில்லை. தசரா திருவிழாவின் 2-ம் நாளான நாளைமுதல், 9-ம் நாளான 25-ம் தேதி வரை பக்‍தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமியை தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00