நவராத்திரி திருவிழா தொடக்கம் : பல்வேறு ஆலயங்களில் அம்மனுக்‍கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு

Oct 18 2020 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
நவராத்திரி பண்டிகை தொடங்கியதையொட்டி, பல்வேறு ஆலயங்களில் அம்மனுக்‍கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில், நவராத்திரி முதல் நாள் உற்சவம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு, பராசக்தி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலுச்சாவடியில் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டு, சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் பல்வேறு கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில், முதல் நாளன்று, அம்மன் இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூரில், 2000 ஆம் ஆண்டு பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழாவின் முதல் நாளில், அம்மனுக்கு தபசு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் பேட்டை வீரகாளியம்மன் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி கோவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

திருச்சி மாவட்டம் முசிறியில் அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, அண்ணாமலையாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடாத்தில், நவராத்திரி முதல் நாளன்று, அகண்ட தீபம் ஏற்றபட்டது. இந்த விழாவில், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து சிறுமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00