தமிழகத்தில் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு

Nov 15 2020 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா விமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்‍கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. அதிகாலைமுதலே திரளான பக்தர்கள் வருகை தந்து, வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு சண்முகருக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கொரானா அச்சுறுத்தல் காரணமாக காப்பு கட்டவும், கோயிலில் தங்குவதற்கும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. உற்சவர் முருகன் தெய்வானைக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தினமும் காலை 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகர் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். 20-ம் தேதி சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கொடிமரத்தை சுற்றி மாவிலை உள்ளிட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபதூப ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் பக்‍திகோஷம் முழங்கியபடி கொடியேற்றப்பட்டது. வரும் சனிக்கிழமை 21-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள காவடி பழனி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. முருகப்பெருமானுக்கு நீல நிறத்திலான உடை அணிவிக்‍கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாநகர் மேலரண் சாலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு வாசனைத் திரவியங்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி கலந்துகொண்டு வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00