குருபெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி குருபகவான் கோயிலில் சிறப்பு யாக வழிபாடு - இரவு 8 மணி வரை பக்‍தர்களுக்‍கு அனுமதி

Nov 15 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வார். அதன்படி, இன்றிரவு 9.46 மணிக்கு குரு பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இன்றிரவு குருபெயர்ச்சியை ஒட்டி பரிகார சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், சந்தனம் போன்ற திரவியங்களும், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கடங்கள் மற்றும் அபிஷேகங்களும் நடைபெற்றன. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் பதிவுசெய்யும் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இன்று இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குருபெயர்ச்சியினால் 12 ராசிக்‍காரர்களுக்‍கும் என்னென்ன பலன்கள் நிகழும் என்பது குறித்து, ஜோதிடர்கள் பங்கேற்கும் நேரலை, இன்று இரவு 9 மணிமுதல், ஜெயா ப்ளஸ் தொலைக்‍காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00