மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளொன்றுக்‍கு ஆயிரம் பக்தர்களுக்‍கு மட்டுமே அனுமதி

Nov 15 2020 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை இன்று தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களுக்கு மேல் சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கெ.ஜெயராஜ் போற்றி, எம்.ரஜிகுமார் ஆகியோரின் அபிஷேக சடங்கு சன்னிதானத்தில் நடைபெற்றது. டிசம்பர் 26-ம் தேதி வரை தினமும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை பக்தர்கள் கொண்டு வர வேண்டும். மருத்துவ சான்றிதழ் இல்லாத பக்தர்கள் கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளி விட்டு மலை ஏறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00