தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார் குருபகவான் : தமிழகம் முழுதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு

Nov 16 2020 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
குருபெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகாரத் தலமாக விளங்கும் திட்டை வசிஸ்டேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குரு பகவானுக்‍கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

குரு பகவான், நேற்றிரவு 9.48 மணிக்‍கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். இதனை முன்னிட்டு குரு பரிகாரத் தலமான தஞ்சாவூர் அருகேயுள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில், குருபகவானுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக சிறப்ப பூஜைகளுக்‍கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வதற்காக வரும் 26 ஆம் தேதி லட்சார்ச்சனை பூஜைகளும், 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை பரிகார பூஜைகளும் நடைபெற உள்ளது.

குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தழுளியுள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. கொரோனா காரணமாக, ஆன்லைனில் பதிவுசெய்த பக்தர்கள் மட்டும சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்‍கப்பட்டனர். ஆனால், அமைச்சர் காமராஜ் குடும்பத்தினர், அவரது ஆதரவாளர்களுக்‍கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தரிசனத்திற்கு அனுமதித்தது, பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சப்தகுரு பரிகார ஸ்தலம் மற்றும் மும்மூர்த்திகள் திருத்தலமான திருச்சி உத்தமர் திருக்கோயிலில், யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பரிகார பூஜைகள் நடைபெற்றது. கொரோனா அச்சத்தால் பரிகார பூஜைகள் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, ஒரு மாத காலம் ஆலயத்திற்கு வந்து குரு பகவானை வழிபாடு செய்தால் நன்மை கிட்டும் என்று கோயில் சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரம்மாவிற்கு சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடைபெற்றது. குருவிற்கு அதிபதியாக விளங்கும் பிரம்மாவிற்கு, குரு பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கக்கூடிய பழனி திருஆவினன்குடி முருகன் கோயிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைப்பெற்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக பூஜைநேரத்திலும், அபிஷேக நேரத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை வைகை ஆற்றங்கரையில் சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பரிகார அர்ச்சனை சிறப்பு பூஜை நடைபெற்றது.

குருபெயர்ச்சியையொட்டி, நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

குருபெயர்ச்சியையொட்டி, தூத்துக்குடியில் உள்ள சிவன் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கொண்டக்கடலை மாலை மற்றும் வெள்ளை மலர்களை காணிக்கையாக செலுத்தி குருபகவானை வழிபட்டனர்.

புதுச்சேரி அருகே உள்ள மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வர பகவான் ஆலயத்தில், குரு பெயர்ச்சியையொட்டி, 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. திரளான பகதர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00