கொரோனா தாக்கம் எதிரொலி - தமிழகத்தில் குறைந்த அளவிலேயே விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள்

Nov 16 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுவாமி ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதைத் ​தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்ப சந்நிதிகளில், பக்‍தர்கள் மாலை அணிவித்து விரதத்தினை தொடங்கினர்.

கார்த்திகை 1-ஆம் தேதியான இன்று, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில், ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து, சபரிமலைக்கு மாலை அணிய வரும் பக்தர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு குறைவாகவே காணப்பட்டது. சபரிமலைக்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பலர் மாலை அணிவிக்‍கவில்லை என பக்‍தர்கள் தெரிவிக்‍கின்றனர்.

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க நாயகர் சந்நதியில், பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படவில்லை. அதேநேரம் ஆலய பிரகாரத்தில் உள்ள ஐயப்பன் படம் முன்பு, தங்களது குருசாமியின் பாதத்தினைத் தொட்டு வணங்கி பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தினைத் தொடங்கினர்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள், குமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கொரோனா காலம் என்பதால், ஆன்லைன் மூலம் பதிவு பெற்றவர்களுக்கு மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளதால், இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பக்‍தர்கள் மாலை அணிவித்தனர்.

இதேபோல், திருவள்ளூர், பெரம்பலூர், நாமக்‍கல், சேலம், புதுக்‍கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஐயப்பன் சந்நிதிகளில், பக்‍தர்கள் மாலை அணிவித்து விரதத்தினை தொடங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00