திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா : ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு இன்றுமுதல் அனுமதி

Nov 17 2020 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவையொட்டி, ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வரும் 3-ந் தேதி வரை ஒருநாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் www.arunachaleswarrtemple.tnhrce.in என்ற கோவில் இணையதளத்தில் ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யும் பக்‍தர்களுக்‍கு கோவில் நிர்வாகம் நிபந்தனைகள் விதித்து உள்ளது. அதன்படி, அதாவது 59 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. முககவசம் அணிந்தவர்களுக்‍கு அனுமதியில்லை - ஆதார் அட்டை நகல் அவசியம் - சிலைகளை தொடக்‍கூடாது - வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00