திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா : தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் இன்று தொடங்கியது

Nov 20 2020 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை ‌அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 64 அடி தங்க கொடி மரத்தில், விருச்சிக லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில், பக்தர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டு விருச்சிக லக்கினத்தில் அதிகாலை 5.50 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பத்து நாட்கள் காலை, மாலை என இருவேளையும் திருக்கோவிலில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உற்சவம் நடைபெறும்.

நிறைவு நாளான வரும் 29ம் தேதி அதிகாலை, திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி திரு.அரவிந்த், திருக்கோவில் இணை ஆணையர் திரு.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00