சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் அம்பாளிடன் முருகன் வேல் பெறும் நிகழ்வு : முருகப்பெருமான் சிலையில் வியர்த்த அபூர்வம்

Nov 20 2020 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில், சூரனை சம்ஹாரம் செய்வதற்காக முருகன் அம்பாளிடம் சக்திவேல் பெறும் நிகழ்ச்சியில், முருகன் சிலைக்கு முத்து முத்தாக வியர்க்‍கும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

திருச்செந்தூரில் சங்காரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கியதாக புராண வரலாறு கூறுகிறது. கந்த சஷ்டிப் பெருவிழாவை முன்னிட்டு, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் கடந்த 15 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நாள்தோறும் கோவில் வளாகத்தின் உள்ளேயே சுவாமி ஊர்வலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான அம்பாளிடம் முருகன் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினார். மகா தீபாராதனைக்குப் பிறகு முருகப்பெருமான் அஜபா நடனத்துடன் ஆலயத்தினுள் வலம் வந்தார். அப்போது அம்பாள் வேல்நெடுங்கண்ணி சன்னதியில் இருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது முருகன் சிலைக்கு முத்து முத்தாக வியர்க்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00