மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மீண்டும் தீ விபத்து - ஜவுளி கடையில் பற்றிய தீ 4 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்பு

Nov 22 2020 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள ஜவுளி கடையில் பயங்கர தீ, 4 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளக்குத்தூண் பகுதியில் உள்ள பைசர் அகமது என்பவருக்கு சொந்தமான பிரபல ஜவுளிக் கடையில் இன்று அதிகாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடை முழுவதிலும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 5-ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த மாதத்தில், மீனாட்சியம்மன் கோவில் அருகே 3-வது முறையாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று, ஜவுளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் மீட்பு பணியின்போது இரண்டு வீரர்கள் உயிர் இழந்தனர். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இருக்கக் கூடிய வணிக வளாகங்களில், தீ தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாததாக, முதற்கட்டமாக 500 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, தீயணைப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆய்வு முடிவதற்குள்ளாகவே தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்படுவதால், உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00