திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா : விநாயகர், சந்திரசேகரர் சிறப்பு வாகனத்தில் வலம் - கொரோனா அச்சத்தால் குறைந்த அளவில் பக்தர்கள் பங்கேற்பு

Nov 22 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்‍கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, விநாயகர், சந்திரசேகரர் சிறப்பு வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்‍கள் கூடுவதை தவிர்க்‍கும் வகையில், கோயிலின் 5ம் பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் மற்றும் சந்திரசேகரர், ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் எழுந்தருளினர்.

முன்னதாக, இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலின் கருவறை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இதனிடையே, அண்ணாமலையார் கோயிலின் கருவறை முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில், ஆயிரத்து எட்டு சங்குகளில், புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அண்ணாமலையாருக்கு உச்சிகால வேளையில் அபிஷேகம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00