திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

Nov 24 2020 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்திவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் நாளான இன்று அதிகாலை, கோயில் நடை திறக்‍கப்பட்டு, அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மனுக்‍கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விநாயகருக்கு தங்கக்‍கவசம் மற்றும் வெட்டிவேர் மாலையும், சந்திரசேகருக்கு தங்க ஆபரணங்களும் அணிவிக்‍கப்பட்டு, முக்குடையில் சிறப்பு விமானத்தில் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

இதனிடையே, தீபத்திருவிழாவில் பங்கேற்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கோயிலுக்‍கு வந்த பக்‍தர்களுக்‍கு, அதிநவீன தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பின்னரே அவர்கள் கோயிலுக்‍குள் அனுமதிக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00