தர்மபுரி மாவட்டம் அரூரில் தூய இருதய ஆண்டவர் ஆலய திருக்காட்சி பெருவிழா : கிறிஸ்தவ பெருமக்கள் பொங்கலிட்டு மகிழ்ச்சி
Jan 4 2021 8:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் திருக்காட்சி பெருவிழாவினை கிறிஸ்தவ பெருமக்கள் பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
இயேசு பெத்லஹேமில் பிறந்திருந்தபோது கிழக்கில் தோன்றிய வால் நட்சத்திரம், கீழை நாட்டு அரசர்கள் 3 பேருக்கு பலநூறு மையில்கள் வழிகாட்ட, அவர்கள் பெத்லஹேம் வந்து சேர்ந்தார்கள் என்று பைபிள் மூலம் அறியப்படுகிறது. மூவரும் குழந்தை இயேசுவைக் கண்டு, பொன் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்தி வணங்கிய நிகழ்வு திருக்காட்சி திருவிழாவாக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் திருக்காட்சி திருவிழா திருப்பலியுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.