ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் நம்மாழ்வார் மோட்சம்
Jan 4 2021 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ராப்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று 'நம்மாழ்வார் மோட்சம்' நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, பட்டர்கள் நம்மாழ்வாரை குழந்தையைப் போல கையில் தாங்கிச் சென்று, பெருமாளின் திருப்பாத கமலங்களில் சேர்த்தனர். பின்னர், சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்பட்டனர். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.