திருவாரூரில் தோட்டத்தில் பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
Jan 7 2021 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூரில் தோட்டத்தில் குழி தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரது தோட்டத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, நடராஜர் சிலை , சிவகாமி அம்மன் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட 7 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ஜெகதீசன் நேரில் சென்று சிலைகளை மீட்டு சென்றனர்.