மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Jan 8 2021 8:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை அருட்திரு. ஜெ.ஜெ.பிரிட்டோ அடிகளார் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட முதன்மை குரு பங்குத்தந்தை பேரருட்திரு.ஆரோக்கியதாஸ் அடிகளார் புனித அந்தோணியாரின் திருஉருவக்கொடியை புனிதம் செய்தார். வாணவேடிக்கை முழங்க, இன்னிசை இசைக்க, ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது.