திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா
Feb 22 2021 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில், பங்குனி தேர்த் திருவிழா, கொடியேற்றதுடன் தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் மண்டல பிரமோற்சவம் 48 நாட்களுக்கு வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரமோற்சவம் எனப்படும் பங்குனி திருவிழா, கடந்த 20-ம் தேதி, அரசடி மண் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பெரிய கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது. பங்குனி திருவிழாவையொட்டி எட்டுத்திக்கிலும் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. சுவாமி சோமாஸ்கந்தர், 3-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்ட வைபவம் மார்ச் 16 -ம் தேதி நடைபெற உள்ளது.