ஆண்டிபட்டி அருகே சீனிவாச பெருமாள் மற்றும் செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
Feb 22 2021 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. ஒக்கரைபட்டியில் உள்ள கவரா நாயுடு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, கோபூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.