ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள், காஞ்சி சங்கராச்சாரியாரை அனுமதிப்பதில் புரோகிதர்களுக்கிடையே வாக்குவாதம்
Feb 23 2021 8:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள், காஞ்சி சங்கராச்சாரியாரை அனுமதிப்பதில், புரோகிதர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த சென்றார். அப்போது அங்கு பணியிலிருந்த மகாராஷ்டிர புரோகிதர்கள், அவரை கருவறைக்குள் செல்ல அனுமதி மறுத்ததால், சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு, சங்கராச்சாரியார் கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தினார்.