கன்னியாகுமரியில் கொரோனா பரவல் காரணமாக, கோயில்களில் வழிபாட்டு முறையில் கட்டுப்பாடுகள் - பிரசாதம் வழங்கவும், பக்தர்கள் பூஜை பொருட்களைக்‍ கொண்டு வரவும் அறநிலையத்துறை தடை

Mar 23 2021 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக, கோயில்களில் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 490 கோயில்களில் பிரசாதம் வழங்கவும், பக்தர்கள் பூஜை பொருட்களை கொண்டு வரவும் அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 30 முதல் 40 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் உட்பட அனைத்து முக்கிய ஆலயங்களிலும் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம், தீர்த்தம் கொடுக்கவும், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டுமென்றால், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பிறகே நடத்த வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00