பழனி முருகன் கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கு - நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Mar 24 2021 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி முருகன் கோவிலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிடக் கோரிய வழக்கில், தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பியதுடன், தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.