பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் கோலாகல தொடக்‍கம் - பங்குனி உத்திர தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Mar 25 2021 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிறப்பு வாய்ந்த திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்ட விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆழித்தேர் புறப்படுவதற்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணிய சுவாமி தேர்கள் வடம் பிடிக்கப்பட்டன. ஆழித்தேருக்கு பின்னால் நீலோத்பலாம்பாள் தேரும், சண்டிகேஸ்வரர் சுவாமி தேரும் வடம் பிடிக்கப்பட்டன. ஒரே நாளில் 5 தேர்கள் ஆலய வீதிகளில் வலம் வந்ததை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் ஆழித்தேர் உலகளவில் பெருமை பெற்றதாகும். தேரின் மரபீடத்தின் வடிவமைப்பும், அதில் காணும் 500க்கும் மேற்பட்ட கலைநயமிக்க சிற்பங்களும் ஆழித்தேர் கட்டுமானத்தின் சிறப்புக்‍கு சான்றாகும். 96 அடி உயரமும் 450 டன் எடையும் கொண்ட ஆழித்தேரை 4 குதிரைகள் இழுத்து செல்வதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரை இழுக்க 4 டன் எடைகொண்ட 500 அடி நீளமுள்ள 4 ராட்சத வடங்களும், தேர் சக்கரங்களை உந்தச்செய்ய இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக திருவாரூரில் ஆழித்தேரோட்டம் நடைபெறாதது நினைவு கூரத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00