திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பங்குனி மாத பெளர்ணமி கிரிவலம் - கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்கத் தடை
Mar 25 2021 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பெளர்ணமி கிரிவலத்திற்கு, கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பங்குனி மாத பௌர்ணமி வரும் 28-ம் தேதி ஞாயிற்று கிழமை அதிகாலை 3.12 மணிக்கு தொடங்கி, மறுநாள் திங்கள் கிழமை அதிகாலை 1.18 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதனால், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதை கருத்தில் கொண்டு வரும் 28-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இரு தினங்களுக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கிரிவலம் செல்வதற்காக வெளிமாவட்ட பக்தர்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வர வேண்டாமென மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.