குருத்தோலை ஞாயிறு தினம் இன்று கடைப்பிடிப்பு - புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய நிகழ்ச்சியில் பாதயாத்திரையாக வந்த ஏராளமானோர் பங்கேற்பு

Mar 28 2021 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிறிஸ்தவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறு தினத்தை ஒட்டி, உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் உட்பட தமிழகம் முழுவதிலும் உள்ள பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் விரதம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி, சாம்பல் புதன் அன்று தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் ஞாயிறன்று கொண்டாட்டப்படும் குருத்தோலை ஞாயிறு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில், குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படியும், கீர்த்தனைகள் பாடியவாறும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருச்சி மேலப்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற தூய மரியன்னை பேராலயத்தில், பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு, கிறிஸ்தவர்கள் வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, பேராலயத்தில் தவக்கால பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில், சொக்கலிங்கபுரம் பகுதியிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையிலுள்ள, புனித குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து, புனித சவேரியார் பேராலயம் வரை, குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடியும், கீர்த்தனைகள் பாடியபடியும், கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00