தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ரத்து - தேவாலயத்திற்குள்ளேயே குருத்தோலைகளை ஏந்தியபடி சென்று கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

Mar 28 2021 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தேவாலயத்திற்குள்ளேயே கிறிஸ்தவர்கள், குருத்தோலையை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று பிரார்த்தனை செய்தனர்.

குருத்தோலை ஞாயிறையொட்டி, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக, தேவாலயத்திற்குள் வரும் பக்‍தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்‍கவசம் அணிவது கட்டாயமாக்‍கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை திருத்தலத்தில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கி, புனித அன்னாள் பள்ளியை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள், கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு பக்‍திப்பாடல்களைப் பாடியபடி சென்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. உதகை தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத்தந்தை தனிஸ், குருத்தோலைகளை மக்களுக்கு வழங்கினார். பின்னர் கிறிஸ்தவர்கள், பவனியாக ஆலயத்திற்குச் சென்று திருப்பலி மற்றும் ஆராதனையில் கலந்துகொண்டனர்.

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில், குருத்தோலை பவனி நடைபெற்றது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக கட்டுப்பாடுகளுடன் எளிமையாக கொண்டாடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00