புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா - சுவாமிக்கு பூக்களை எடுத்து சென்று ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

Mar 29 2021 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராள மக்‍கள் கூடை கூடையாக மலர்களை கொண்டு வந்த அம்மனுக்‍கு சாற்றி வழிபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்திபெற்றதாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் ஆலையத்தில் பூச்சொரிதல் விழா ​விமர் சியாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி திருவெறும்பூர் அடுத்துள்ள, போலீஸ் காலனி ஞானவிநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மன் திரு உருவப்படம் சிறப்பு அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழுங்க ஊர்வலமாக எடுத்து அம்மன் திருஉருவப்படம் செல்லப்பட்டது. ஆயிரக்‍கணக்‍கான மக்‍கள் கூடை கூடையாக பூக்‍களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்‍கு சாற்றி வழிப்பட்டனர்.

இதனிடையே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலய பங்குனித் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்‍கணக்கான பக்‍தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற பக்தி முழுக்‍கமிட்டப்படி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கடந்த 20 -ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முக்கிய நிகழ்வான பங்குனித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. நம்பெருமாள், நீலநாயகம் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தாயார் சந்நதி வழியாக கோரதத்திற்கு வந்தடைந்தார், தெடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகளைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00