திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருவிழா : சூரசம்ஹார நிகழ்வை கண்டு களித்த பக்தர்கள்

Mar 30 2021 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், சூரசம்ஹார விழா ஆண்டுக்கு இருமுறை நடைபெறுவது வழக்கம். ஐப்பசி மாதம் சஷ்டி விரதத்தின்போதும், பங்குனி பெருவிழாவின்போதும் திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும். அதன்படி, பங்குனி பெருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக சுப்ரமணிய சுவாமி, தங்க மயில் வாகனத்தில் தெய்வானை அம்மனுடன் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்தார். பின்னர், சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயில் முன்பு, பிரபு பட்டர் வீரபாகு சுவாமியிடம் இருந்து சூரசம்ஹார லீலையை பற்றி பக்தர்களுக்கு எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று பட்டாபிஷேகமும், நாளை திருக்கல்யாணமும் நடைபெறும். அதனை தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00