திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடைபெற்ற பங்குனித் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு
Apr 1 2021 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் பிரசித்திபெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு, பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதனிடையே, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ள திருவெள்ளறை பெருமாள் கோயிலில் பங்குனிப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. பெருமாள்-தாயார் திருக்காவிரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.