புனித வெள்ளி தினத்தையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சி - கிறிஸ்துவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று பிரார்த்தனை

Apr 2 2021 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
புனித வெள்ளியை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்‍கணக்‍கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளியையொட்டி, பெரிய சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அத்திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்திரு இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஓசூர், தேன்கனிக்‍கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில், புனித வெள்ளியையொட்டி, கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. பழமைவாய்ந்த நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்தில், பங்குத் தந்தை வின்சென்ட் தலைமையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில், பங்குத்தந்தை சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து பாடல்களைப் பாடியபடி சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00