ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனை : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று வழிபாடு

Apr 4 2021 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏசுபிரான் உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ''பாஸ்கா ஒளி''ஏற்றப்பட்டது. கலை அரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலயஅதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். பின்னர் நடைபெற்ற பிரார்த்தனையில், பல்லாயிரகணக்கானோர் கலந்துகொண்டு, கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிராத்தனை செய்தனர்.

திருச்சி மேலப்புதூரில் உள்ள புனித மரியன்னை பேராலயத்தில், இயேசு உயிர் பெற்றெழுந்ததையடுத்து வாணவேடிக்கைகள் விண்ணில் முழங்க, அருட்தந்தை சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது. இந்த திருப்பலியில் பெருந்திரளான கிறிஸ்தவ பங்குமக்கள் கலந்துக்கொண்டு, இயேசு புகழ் பாடல்களைப்பாடி வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00