நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனித் தேரோட்டம்
Apr 5 2021 7:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே, திருக்குறுங்குடியில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அழகிய நம்பிராயர் தேரில் எழுந்தருள, தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர், கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக வந்து நிலையை வந்தடைந்தது.