கும்பகோணம் சக்கரபாணி சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்
Apr 7 2021 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் சக்கரபாணி சுவாமி ஆலயத்தில், பங்குனி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி பெருவிழாவின் ஒரு பகுதியாக பங்குனி திருவோண நட்சத்திர தினமான நேற்று, இவ்வாலயத்தில் சக்கரபாணி சுவாமி மற்றும் விஜயவல்லி தாயார் திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க, மாலை மாற்றும் நிகழ்ச்சியுடன் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.