கொரோனா பரவல் எதிரொலியால் திருமலை திருப்பதியில் இலவச தரிசனம் வரும் 12-ம் தேதிமுதல் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு
Apr 7 2021 8:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் காரணமாக, திருமலை திருப்பதியில் இலவச தரிசனம் வரும் 12-ம் தேதிமுதல் ரத்து செய்யப்படுவதாகவும், 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலவச தரிசனம் வரும் 12-ம் தேதிமுதல் ரத்து செய்யப்படுவதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இலவச தரிசன டோக்கன்களை வாங்குவதற்காக அதிக அளவில் பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவதாகவும், இதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நிலைமை சீரடைந்த பின்னர், இலவச தரிசன டோக்கன் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.