மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா : சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள கோயில் நிர்வாகம் : கொரோனா பரவலால் திருவிழா ரத்தாகுமோ என பக்தர்கள் சந்தேகம்

Apr 8 2021 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவலை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. சித்திரை திருவிழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாததால், திருவிழா ரத்து செய்யப்படுமோ என பக்தர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி திருக்கல்யாண வைபவம் மட்டும், பக்தர்களின்றி கோயிலுக்குள் நடத்தப்பட்டது. இதே போன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியானது. இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள கோயில் நிர்வாகம், சித்திரை திருவிழா தேதி தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் சித்திரை திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வதந்திகளை தவிர்க்க கோவில் நிர்வாகம் உரிய அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00