திருப்பதியில் ஏழுமலையானை நாளை முதல் தரிசனம் செய்ய இலவச டோக்கன் வினியோகம் - டோக்கன் வாங்குவதற்காக பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

Sep 22 2021 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதியில் ஏழுமலையானை நாளை முதல் தரிசனம் செய்ய இலவசமாக டோக்கன்கள் வழங்கப்படுவதால், தரிசன டோக்கன் வாங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த 8-ஆம் தேதி, சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் தினமும் 2 ஆயிரம் எண்ணிக்கையில் இலவச டோக்‍கன் விநியோகிக்கப்பட்டு வந்தது. தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன் தேவை என்று மற்ற மாநிலங்களில் உள்ள பக்தர்களும் தேவஸ்தானத்திடம் கோரி வந்தனர்.

இதையடுத்து இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை 8,000-ஆக உயர்த்தப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் ஏழுமலையானை இலவசமாக தரிசிப்பதற்கு தேவையான டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏழுமலையானை தரிசிப்பதற்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளதால், திருப்பதியில் கொரோனா வேகமாக பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, திருமலை ஏழுமலையானை அடுத்த மாதம் தரிசிப்பதற்காக, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை, 9.00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00