திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்தின் கணக்கு தணிக்கைக்கு விலக்கு அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு - கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Sep 22 2021 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ஆலயத்தின் 25 வருட வரவு செலவு கணக்கு தணிக்‍கைக்‍கு விலக்‍கு அளிக்‍க முடியாது உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயத்தை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சனை சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கோயிலை நிர்வகிக்க மாநில அரசு தனி அறக்கட்டளையை அமைக்கலாம் என்று கேரள உயா்நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. கோயிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கே உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதே நேரம், கடந்த 25 ஆண்டுகளில் கோயிலுக்கான வரவு செலவு விவரங்களைத் தணிக்கை செய்ய வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வரவு செலவு கணக்குத் தணிக்கைக்‍கு விலக்‍கு அளிக்‍கக்‍கோரி திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு​செய்தது. இந்நிலையில், பத்மநாப சுவாமி ஆலயத்தின் 25 வருட வரவு செலவு கணக்கு தணிக்‍கைக்‍கு விலக்‍கு அளிக்‍க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், 3 மாதத்தில் கணக்‍கு தணிக்‍கை முடிக்‍கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அறக்கட்டளை தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00