தைப்பூசத்தையொட்டி நாகை அருகே உள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் - கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Jan 18 2022 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூசத்தை முன்னிட்டு நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிங்காரவேலவருக்கு இன்று விடியற்காலை மூலமந்திர சிறப்பு யாகம் நடைபெற்றது பின்னர் முருகப்பெருமானுக்கு பால் பன்னீர் விபூதி சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தீப ஆராதனைகள் நடைபெற்றன. கொரோனா பரவல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.