பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா : நடராஜ பெருமான் ஆனந்த நடன காட்சி தரும் வைபவம் வெகுவிமர்சை

Jan 20 2022 10:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு நடராஜ பெருமான் ஆனந்த நடன காட்சி தரும் வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் தைப்பூச திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜ பெருமாள் காந்திமதி அம்பாளுக்கு ஆனந்த தாண்டவ காட்சி தரும் நிகழ்ச்சி நெல்லையப்பர் கோவில் செளந்தர சபை மஹா மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக திருக்கோவிலிருந்து காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செளந்தரசபைக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கைலாய வாத்தியங்கள் முழங்க நடராஜா் எழுந்தருளி காந்திமதி அம்பாளுக்கு தன் திருநடனக்காட்சி காட்டி அருளினார். வேதம், சிவாகமம், திருமுறை மங்கலவாத்யம், பஞ்சவாத்யம் முழங்க நடராஜர் திருநடன காட்சி வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பா் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அம்பாள் சுவாமிய 3 முறை வலம் வந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று, சுவாமி அம்பாளுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00